உள்ளூர் செய்திகள்
சாத்தான்குளம் தேவி முத்தாரம்மன் கோவிலில் தசரா சப்பரபவனி
- தேவி முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது
- சாத்தான்குளம் அனைத்து பகுதிகளுக்கு நகர் வலமாக சென்று நேற்று மதியம் சப்பரம் கோவிலுக்கு வந்தடைந்தது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் தேவி முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-ம் திருவிழாவான கடந்த 5-ந் தேதி காலை மஞ்சள் பெட்டி எடுத்து ஊர்வலம், அலங்கார கும்பம் ரதவீதி ஊர்வலம் வருதல், இரவு முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வருதல், சுவாமி அக்னி சட்டி ஏந்தி ரதவீதி வருதல், இரவு 12மணிக்கு அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடைபெற்றது.
சாத்தான்குளம் அனைத்து பகுதிகளுக்கு நகர் வலமாக சென்று நேற்று மதியம் சப்பரம் கோவிலுக்கு வந்தடைந்தது. இதையடுத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. அனைத்து பகுதியிலும் சப்பரத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு பக்தர்கள் அர்ச்சனை சாத்தி வழிப்பட்டனர். மேலும் 10நாட்களும் பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து வந்து காணிக்கை பிரித்து அம்மனுக்கு செலுத்தினர்.