உள்ளூர் செய்திகள்

முதிர்வுத்தொகை பெறாத பயனாளிகளை கண்டறியும் முகாம் 8-ந் தேதி நடக்கிறது

Published On 2023-07-30 15:51 IST   |   Update On 2023-07-30 15:51:00 IST
  • முதிர்வுத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
  • அடுத்த மாதம் 8-ந் தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

மயிலாடுதுறை மாவட்ட சமூக நல அலுவலகம் கருணாநிதி நூற்றாண்டு விழாவை கொண்டாடுதல் ஜூன் 2023 முதல் ஜூன் 2024 வரை முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாது காப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்த பெண் குழந்தைகளின் வயது 18-ஐ கடந்தும் முதிர்வுத்தொகை வழங்கப்படாமல் உள்ளவர்களின் விபரங்களை தொடர்ந்து தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்திடம் இருந்து பெற்று அவர்களுக்கு முதிர்வுத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள முதிர்வுத்தொகை பெறாத பயனாளிகளை கண்டறியும் முகாம் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 8-ந் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.

இதில் அனைத்து பயனாளிகளும் கலந்து கொண்டு பயனடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News