உள்ளூர் செய்திகள்

உடன்குடி அருகே பனை மரங்கள் வெட்டப்பட்டுள்ள காட்சி.

உடன்குடி பகுதியில் பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

Published On 2022-11-13 08:06 GMT   |   Update On 2022-11-13 08:06 GMT
  • உடன்குடி பகுதிகளில் பனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.
  • அதிகாரிகள் பனை மரம் வெட்டுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

உடன்குடி:

உடன்குடியில் இருந்து ஜே.ஜே.நகர் வழியாக திருச்செந்தூர் செல்லும் மெயின் ரோட்டின் கரையில் பல இடங்களில் சின்ன சின்ன பனை மரங்கள் வெட்டப்பட்டு கிடக்கின்றன. இவ்வாறு வெட்டப்படுவதை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழக அரசுபனை மரங்களை அதிக அளவில் வளர்க்க வேண்டும், விவசாயத்தை விருத்தி செய்ய வேண்டும், பனைமரம் வளர்ப்பதால் 100 வகையில் மக்களுக்கு பயன்தரும் என்பதை விளக்கி பனைமரங்களை வளர்க்க விழிப்புணர்வு பிரசாரம் செய்து, பனைமரம் வளர்ப்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் பனை மரங்களை ரோட்டு ஒரமாகவெட்டி போட்டிருப்பது மிகவும் வேதனையாக உள்ளது என்று பலர் கூறுகின்றனர்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பனை மரம் வெட்டுவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News