பொது மக்களின் தேவைகள் அடிப்படையில் முன்னுரிமை அளித்து பணிகள் செயல்படுத்தப்படும்: மாவட்ட திட்டக்குழு தலைவர் தகவல்
- எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவில்தமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
- முன்னுரிமை அளித்து வளர்ச்சி திட்ட பணிகள் செயல்படுத்தப்படும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட திட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட திட்டக்குழு தலை வரும்,மாவட்ட ஊரா ட்சிக்குழு தலைவருமான புவனேஸ்வரி பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வ ராணி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் தங்கம்,ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட திட்ட குழு தலைவர் பேசியதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவில்தமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நமது மாநிலத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், துணைதலைவர், ஒன்றியக்குழு தலைவர், ஒன்றியக்குழு துணை த்தலைவர், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அதிக இடஒது க்கீடுகளை வழங்கியுள்ளார். மேலும் பெண்களின் பொருளாதார மேம்பாட்டை அதிகரிக்கும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கி வரும் முதல்-அமைச்ச ருக்குமாவட்ட திட்ட குழு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக மாவட்ட கலெக்டரும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதற்கு சான்றாக சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனியா ர்வேலைவாய்ப்பு முகாமில் ஆயிரக்கணக்கான வேலைநாடுநர்கள் வேலை பெற்றுள்ளனர். மேலும்,கிராமங்கள் நிறைந்த கள்ளக்குறிச்சி மாவ ட்டத்தில், கிராமப்புறங்களில் என்ன வளர்ச்சி பணிக ள்தேவைகள் என்பதை மாவட்ட திட்டக்குழு மூலம் கண்டறிந்து பொதுமக்களின் தேவை களின் அடிப்ப டையில் முன்னுரிமை அளித்து வளர்ச்சி திட்ட பணிகள் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட கலெக்டர்ஷ்ரவன் குமார் பேசியதாவது:-
அரசு தொடக்கப் பள்ளிகளில் வழங்கப்படும் காலை சிற்றுண்டி திட்டம் தரமாக வழங்கப்படுகிறதா, குறித்த நேரத்தில் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதியான பயனாளிகள் யாரேனும் விடுபட்டுள்ளனரா, பருவ மழைக்கு முன்பு கால்வாய் தூர்வாரப்பட்டுள்ளதா, குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறதா மற்றும் கிராமத்தில் உள்ள அரசு கட்டிடங்களில் நிலை மற்றும் தேவைகள் குறித்தும் திட்டக்குழு உறுப்பினர்கள் பார்வையிட வேண்டும். இதே போல் ஒவ்வொரு ஊராட்சியிலும் சாலை, கழிவு நீர், குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மேலும் அப்பகுதி மக்களின் உடனடி தேவை குறித்து கேட்டறிந்து மாவட்ட திட்ட குழு ஒப்புதலுடன், மாநில திட்ட குழுவிற்கு தேவைப்படும் திட்டங்கள் குறித்து விரிவான அறிக்கை தயார் செய்தும், அதற்கு ண்டான நிதிவசதிகள் குறித்தும் திட்ட அறிக்கை சமர்ப்பித்து, தொடர் நட வடிக்கைகள் மேற்கொள்ளலாம் . இவ்வாறு அவர் பேசினார். இதில் மாவட்ட ஊராட்சி குழு செயலாளர்முரளிதரன், துணை இயக்குநர் (வேளாண்மை திட்டம்) சுந்தரம், உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) சவிதா, திட்ட குழு உறுப்பினர்கள், மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.