உள்ளூர் செய்திகள்
பூட்டிய வீட்டின் கதவை உடைத்து பணம் - வெள்ளி பொருட்கள் திருட்டு
- மறுநாள் வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
- மொத்தம் திருடு போன பணம், பொருட்களின் மதிப்பு ரூ.24 ஆயிரத்து 500 என கூறப்படுகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சை மானோஜிபட்டி மங்களம் நகரை சேர்ந்தவர் பெலிப்ஸ் பெர்னாண்டஸ் (வயது 28).
சம்பவத்தன்று இரவு இவர் வீட்டை பூட்டிவிட்டு தனது தந்தை வீட்டுக்கு சென்று தங்கினார்.
மறுநாள் வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
அதிர்ச்சி அடைந்த பெலிப்ஸ் பெர்னாண்டஸ் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பொருட்கள், உண்டியல் பணம், கைக்கடிகாரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
மொத்தம் திருடு போன பணம், பொருட்களின் மதிப்பு ரூ.24 ஆயிரத்து 500 என கூறப்படுகிறது.
இது குறித்த அவர் தஞ்சை மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.