உள்ளூர் செய்திகள்
ஸ்ரீ கிருஷ்ணருக்கு 108 குடம் பால் அபிஷேகம்
- மேளத்தாளத்துடன் ஊர்வலமாக சென்றனர்
- வழுக்கு மரம் ஏறுதல், உரியடி திருவிழா நடந்தது
ஆரணி:
ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தில் உள்ள ராதா ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபால் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா ஊராட்சி மன்ற தலைவர் ஷர்மிளா தரணி தலைமையில் நடைபெற்றது.
மேலும் காலையில் மூலவர் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தன. பெருமாள் கோவிலிருந்து 108 பெண்கள் பால்குடம் ஏந்தி மேளத்தாளத்துடன் ஊர்வலமாக கிருஷ்ணர் கோவில் அடைந்தனர்.
பின்னர் மூலவருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதனையடுத்து வழுக்கு மரம் ஏறுதல் உரியடி திருவிழாவை தொடர்ந்து கிருஷ்ண லீலைகள் என்ற பக்தி சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சி ஏற்பாட்டை கோவில் நிர்வாக தலைவர் ஜெயராமன், ஊராட்சி மன்ற தலைவர் ஷர்மிளா தரணி, நிர்வாகிகள் தர்மன், விஜயகுமார் உட்பட பலர் செய்து வருகின்றனர்.