உள்ளூர் செய்திகள்

இடி தாக்கி 2 மாடுகள் சாவு

Published On 2023-12-01 13:33 IST   |   Update On 2023-12-01 13:33:00 IST
  • அதிகாரிகள் விசாரணை
  • இடியுடன் கனமழை பெய்தது

ஆரணி:

கண்ணமங்கலம் அடுத்த புது பேட்டையை சேர்ந்தவர் சரஸ்வதி. இவருக்கு சொந்தமாக கொளத்தூரில் நிலம் உள்ளது.

அங்கு கொட்டகை அமைத்து மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் ஆரணி சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இடியுடன் கனமழை பெய்தது.

அப்போது சரஸ்வதி கொட்டகையில் கட்டி வைத்திருந்த 2 மாடுகள் மீது திடீரென இடி தாக்கியது. இதில் மாடுகள் பரிதாபமாக இறந்தது. சரஸ்வதி மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவதற்காக கொளத்தூரில் நிலத்திற்கு வந்தார்.

அப்போது கொட்டகையில் கட்டி வைத்திருந்த மாடுகள் இடி தாக்கி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இறந்து கிடந்த மாடுகளை பார்த்து கதறி அழுதார்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரி வித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 

Tags:    

Similar News