உள்ளூர் செய்திகள்
கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் கைது
- போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்
- 150 கிராம் பாக்கெட்டுகள் பறிமுதல்
வெம்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் பல்லாவரம் அம்மன் கோவில் அருகே, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகிக்கும் வகையில் வந்த 3 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை பகுதியைச் சேர்ந்த குமார் ( வயது 22), நவாப் (19), சக்திவேல் (23) என்பதும், அவர்கள் கஞ்சா கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 150 கிராம் கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.