- விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற போது பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிந்து விசாரணை
வந்தவாசி:
தெள்ளாரை அஸ்தினாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமநாதன்(32). இவரது மனைவி சங்கீதா(வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது. சங்கீதா தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
கடந்த சனிக்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்ற ராமநாதன் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லையாம்.
இந்த நிலையில் மருதாடு கிராமத்தில் வசிக்கும் சங்கீதாவின் தந்தை மூர்த்தி தனது விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார்.
அப்போது அந்த நில கிணற்றில் குப்புற கவிழ்ந்த நிலையில் ராமநாதன் இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்த கீழ்க்கொடுங்காலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராமநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நீச்சல் தெரியாத ராமநாதன் குளிக்கும்போது கிணற்றினுள் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மனைவி சங்கீதா அளித்த புகாரின்பேரில் கீழ்க்கொடுங்காலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.