உள்ளூர் செய்திகள்

தேவிகாபுரம் ஊராட்சியில் திட்ட பணிகளை கூடுதல் ஆட்சியர்கள் ஆய்வு

Published On 2023-11-02 13:38 IST   |   Update On 2023-11-02 13:38:00 IST
  • ரூ.1 கோடி மதிப்பில் பணிகள் மும்முரம்
  • மண்புழு உரம் தயாரித்தல், விற்பனை குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியம் தேவிகாபுரம் ஊராட்சியில் ரூ.70 லட்சத்தில் பள்ளி வகுப்பறை கட்டிடம், ரூ.14 லட்சத்தில் அங்கன்வாடி மையம், ரூ.7 லட்சத்தில் தேவரடியான் குளம் சீரமைப்பு பணி, ரூ.1.83 லட்சத்தில் கழிப்பறை கட்டிடம், ரூ.3 லட்சத்தில் திடக்கழிவு உரக்குழி மண்புழு தயாரித்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை, கூடுதல் ஆட்சியர்கள் ரிஷப் (திருவண் ணாமலை), ஸ்ருதன் ஜெய் நாராயணன் (விழுப்புரம்), பிரியங்கா (திருவாரூர்), சரண்யா (கடலூர்) ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது மக்கும் குப்பை, மக்காத குப்பையை தரம் பிரித்தல், பிளாஸ்டிக் அகற்றுதல், மண்புழு உரம் தயாரித்தல் மற்றும் விற்பனை குறித்து தூய்மைப் பணியாளர்களிடம் கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் கேட்டறிந்தார்.

ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளர் கோவேந்தன், உதவி பொறியாளர்கள் சரவணன், சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயலட்சுமி, பாலமுருகன், ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News