உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்

சமூக வலைதளத்தில் தி.மு.க. பெண் நிர்வாகி குறித்து ஆபாச பதிவு

Published On 2023-12-01 13:21 IST   |   Update On 2023-12-01 13:21:00 IST
  • பா.ம.க. பிரமுகர் கைது
  • போலீசில் புகார்

வந்தவாசி:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியை சேர்ந்தவர் ரீனா இளவரசி (வயது 40). தி.மு.க. மாவட்ட சமூக வலைதள பிரிவு துணை அமைப்பாளராக உள்ளார்.

இந்த நிலையில் செய்யாறு சிப்காட் விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்தும் முயற்சியை கைவிடக் கூறி பா.ம.க.வினர் கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. கணேஷ்குமார், அமைச்சர் எ.வ.வேலு குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ரீனா இளவரசி சமூக வலை தளத்தில் பதிவிட்டதாக தெரிகிறது.

இதையடுத்து வந்தவாசி கிழக்கு ஒன்றிய பா.ம.க. முன்னாள் செயலாளர் கீழ்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பிரபுதேவா (27) என்பவர் ரீனா இளவரசியின் படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு ஆபாச வார்த்தையை கூறி பதிவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ரீனா இளவரசி வந்தவாசி தெற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று பிரபு தேவாவை கைது செய்தனர். தகவல் அறிந்த பா.ம.க. வினர் போலீஸ் நிலையம் முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில் பிரபுதேவாவின் மனைவி சங்கீதா (23) என்பவர், ரீனாஇளவரசி சமூக வலைதளத்தில் தன்னை இழிவாக பேசி பதிவிட்டுள்ளார் என்று கூறி டி.எஸ்.பி. ராஜூவிடம் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக இரு தரப்பினரும் மாறி மாறி புகார் அளித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News