- வழக்குகளை வாபஸ் பெற வலியுறுத்தி நடந்தது
- கோஷங்களை எழுப்பினர்
கீழ்பென்னாத்தூர்:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மேல்மா சிப்காட் போராட்ட த்தின் போது விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், கீழ்பென்னாத்தூர் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு கீழ்பென்னாத்தூர் ஒன்றிய செயலாளர் கோபி (எ) கேசவன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் செல்வராஜ், முன்னோடி விவசாயிகள் கோதண்டராமன், பலராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் மாநில துணை செயலாளர் ஏழுமலை, திருவண்ணா மலை மாவட்ட செயலாளர் குணசேகரன் ஆகியோர் கலந்துகொண்டு, செய்யாறு மேல்மா சிப்காட் பணியினை நிறுத்த வேண்டும் எனவும், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
இதில் கீழ்பென்னாத்தூர் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.