உள்ளூர் செய்திகள்

ஆரணியில் கருகிய தீயணைப்பு அதிகாரி சாவு

Published On 2023-07-12 13:33 IST   |   Update On 2023-07-12 13:33:00 IST
  • மனைவி சம்பவ இடத்திலேயே பலியானார்
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

ஆரணி:

ஆரணி டவுன், அருணகிரிசத்திரம், கண்ணப்பன் தெருவில் வசிப்பவர் சரவணன் (வயது 52). ஆரணி தீயணைப்பு நிலையத்தில் சிறப்பு நிலையஅலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (48).

சரவணன் வீட்டில் 6 மாதமாக உபயோகப்படுத்தாமல் இருந்த ஸ்டவ் அடுப்பை எடுத்து அதில் மண்ணெண்ணை ஊற்றி வேகமாக பம்ப் செய்தார். இதில் எதிர்பாராத நிலையில் ஸ்டவ் வெடித்தது.

அந்த நேரத்தில் ஜெயலட்சுமி காஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். ஸ்டவ் வெடித்ததில் மண்ணெண்ணை சிதறி கியாஸ் அடுப்பில் பட்டதால் ஜெயலட்சுமி, சரவணன் ஆகி யோரது உடையில் தீப்பிடித்து எரிந்தது. இதில் ஜெயலட்சுமி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சரவணனை அப்பகுதி மக்கள் மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் சரவணனை பரிசோதனை செய்து மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதிகாரியும் இறந்தார்

இந்நிலையில் சரவணன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன், மனைவி இருவரும் அடுத்தடுத்த நாட்களில் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News