திருவண்ணாமலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
- பொதுமக்கள் அவதி
- சாலையின் இரு புறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டி ருந்ததால் வாகனங்கள் செல்ல முடியவில்லை
வேங்கிக்கால்:
திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர் ணமியை முன்னிட்டு சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.
பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ் மற்றும் சிறப்பு ெரயில்கள் இயக்கப்பட்டன.
கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் வாகனங்கள் அனைத்தும் நகரத்திற்கு வெளியே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டன.
வெளியூர் வாகன ஓட்டிகள் சாலை ஓரங்களிலேயே பார்க்கிங் இடமாக பயன்படுத்தி, ஆங்காங்கே நிறுத்தி வைத்திருனர்.
சாலையின் இரு புறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டி ருந்ததால், வாகனங்கள் எளிதில் கடந்து செல்ல முடியாத சூழல் நிலவியது.
அதேபோல் கிரிவல பாதை மற்றும் நகர பகுதிக்குள் செல்ல ஆட்டோ, பைக் உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. மேலும் குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே ஆட்டோ செல்ல வேண்டும் என அனுமதி வழங்கப்ப ட்டுள்ளது.
ஆனால் விதிமுறைகளை ஏதும் பின்பற்றாமல் ஒருசில ஆட்டோக்கள் கிரிவல பாதையில் பொது மக்களுக்கு இடையூறாக ஆங்காங்கே சுற்றி திரிந்தன.
நினைத்த இடத்தில் ஆட்டோவை நிறுத்தி பயணிகளை ஏற்றுவது, மற்றும் இறக்குவது போன்ற போக்குவரத்து அத்து மீறல்களில் ஈடுபட்டனர்.
கடும் போக்குவரத்து நெரிசல்
பவுர்ணமி தினத்தை ஒட்டி திருவண்ணாமலை நகர பகுதியில் ஏராள மானோர் குவிந்ததால், வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பக்தர்கள் அதிகம் பயன்படுத்தும் சன்னதி தெரு, மாடவீதி, திருமஞ்ச கோபுர வீதி, சின்ன கடைத்தெரு, கொச மடத்தெரு, கோபால் பிள்ளையார் கோவில் தெரு, அய்யங்குளத் தெரு உள்ளிட்ட அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள தெருக்களிலும் போக்கு வரத்தில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது.
இது குறித்து போக்குவரத்து போலீஸ் துறையினர் தனிக் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.