உள்ளூர் செய்திகள்

போதை பொருட்கள் விற்றால் சிறை தண்டனை

Published On 2023-11-30 13:07 IST   |   Update On 2023-11-30 13:07:00 IST
  • டி.எஸ்.பி. எச்சரிக்கை
  • 2 பேர் கைது

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் மற்றும் சுற்று வட்டார பகுதியில் குட்கா, ஹான்ஸ் போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்ப ட்டுள்ளன.

இது சம்பந்தமாக வடுகசாத்து, அரையாளம் கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்றவற்றை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் ஆரணி டவுன் போலீஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்ற வியாபாரிகள்ஆலோசனை கூட்டத்திற்கு இன்ஸ்பெக்டர் சுப்பிரம ணியன் அனை வரையும் வரவேற்றார். டி.எஸ்.பி. ரவிசந்திரன் தலைமையில் தாங்கினார்.

இதில் மொத்த வியாபாரிகள் மளிகை கடை வியாபாரிகள் சிறு குறு வியாபாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். டி.எஸ்.பி. ரவிசந்திரன் பேசியதாவது:-

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை வஸ்துக்களை வியாபாரிகள் விற்பனை செய்யப்பட்டால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

அதே போல மற்ற வர்கள் விற்ப னை செய்தால் 10,581 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என வியாபாரிகளை டி.எஸ்.பி ரவி சந்திரன் அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News