தாய், மகனை தாக்கி கொலை மிரட்டல்
- வாலிபர் கைது
- போலீசார் விசாரணை
செய்யாறு:
வெம்பாக்கம் அடுத்த புத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன். இவரது மனைவி கன்னியம்மாள் (வயது 55).
இவர்களது வீட்டு முன்பு செங்கற்களை அடுக்கி வைத்துள்ளனர். அதனை பக்கத்து வீட்டைச் சேர்ந்த சுகுணா என்பவர் செங்கற்களை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த கன்னியம்மாள் ஏன் செங்கற்களை எடுக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டார்.
இதனைக் கண்ட சுகுணாவின் மகன் ராஜபாண்டியன் (36) என்பவர் கன்னியாம்மாளிடம் தகராறு செய்து திட்டியதாக தெரிகிறது.
இது குறித்து கன்னியம்மாள் மகன் சரவணனிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சரவணன் ஏன் என் அம்மாவிடம் தகராறில் ஈடுபடுகிறீர்கள் என்று சுகுணாவிடமும், ராஜபாண்டியிடமும் கேட்டுள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த ராஜபாண்டி, அவரது தம்பி சதாசிவம் மற்றும் செய்யாறை சேர்ந்த 2 பேர் கன்னியம்மாளையும், சரவணனையும் சரமாரியாக தாக்கி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
பின்னர் கண்ணியம்மாளின் இளையமகன் ஜெயவேலு பிரம்மதேசம் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் நேற்று சதாசிவத்தை கைது செய்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து மற்றவர்களை தேடி வருகின்றனர்.