உள்ளூர் செய்திகள்

சாலை பள்ளத்தை சீரமைத்த போலீசார்

Published On 2023-11-06 13:26 IST   |   Update On 2023-11-06 13:26:00 IST
  • பொதுமக்களிடையே நெகிழ்ச்சி ஏற்படுத்தியது
  • குண்டும் குழியுமா இருந்ததால் கடும் அவதி

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் அரசு மேநிலைப்பள்ளி எதிரே உள்ள சாலை சேதமடைந்து கிடக்கிறது.

ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமான சாலையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

மேலும் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் விழுந்து காயங்களுடன் செல்வது தொடர்கதையாக உள்ளது.

இந்த நிலையில் கடந்த மாதம் வேலூர் தொரப்பா டியை சேர்ந்த பெண் தனது மகனுடன் மொபட்டில் படவேடு ரேணுகாம்பாள் கோவி லுக்கு சென்று வீடு திரும்பிய போது அந்த பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தார்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

எனவே மீண்டும் அந்த இடத்தில் விபத்து ஏற்படாமல் இருக்க சந்தவாசல் போலீசார் நடவடிக்கை எடுத்து ள்ளனர். அதன்படி சந்தவாசல் போலீசார் சப்- இன்ஸ்பெ க்டர்கள் நாராயணன், மகேந்திரன் மற்றும் போலீசார் விபத்து நடந்த பள்ளத்தை சிமெண்டு கலவை கொண்டு சீரமை தந்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News