வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செய்யாறு:
செய்யாறு ஒன்றியம் ,காழியூர் கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு உதவி இயக்குனர் சதீஷ்குமார் தலைமை வகித்தார்.
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்து, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.
முகாமில் 1,050 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது.
பின்னர் அதே கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நாடக மேடையை ஒ.ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ஞானவேல் ,தினகரன், சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் பரணிதரன் ,மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அசோக் ,தொண்டரணி அமைப்பாளர் ராம்ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.