உள்ளூர் செய்திகள்

படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் பொது விருந்து

Published On 2023-08-16 09:29 GMT   |   Update On 2023-08-16 09:29 GMT
  • 500 பேருக்கு வடை பாயசத்துடன் உணவு பரிமாறப்பட்டது
  • கலசபாக்கம் சரவணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் சுதந்திர தின விழா முனனிட்டு சிறப்பு வழிபாடு பொதுவிருந்து நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், போளூர் ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெருமாள், அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் ஆர் வி சேகர், படவேடு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாமரைச் செல்விஆனந்தன், திமுக நிர்வாகிகள் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டனர். இதில் 500 பேருக்கு வடை பாயசத்துடன் விருந்து பரிமாறப்பட்டது.

ராஜகோபுரம் முன்பு சுதந்திர தின விழாவை முன்னிட்டு செயல் அலுவலர் சிவஞானம் தேசியக்கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். மேலும் கோவில் மண்டபத்தில் அம்மனுக்கு காணிக்கையாக வந்த கைத்தறி சேலைகளை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், 500 ஏழை பெண்களுக்கு வழங்கினார்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சிவஞானம், ஆய்வாளர் நடராஜன், ஓய்வு மேலாளர் மகாதேவன் கணக்காளர் சீனிவாசன் உள்பட கோயில் அலுவலர்கள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News