உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலையில் கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு

Published On 2023-11-03 13:45 IST   |   Update On 2023-11-03 13:45:00 IST
  • வருகிற 5-ந்தேதி நடக்கிறது
  • 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்

திருவண்ணாமலை:

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தால் ஆண்டுதோறும் சீனியர்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 2023-24-ம் ஆண்டிற்கான கிரிக்கெட் போட்டிகள் வருகிற டிசம்பர் மாதம் 3-வது வாரத்தில் பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்பட உள்ளது.

மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட திருவண்ணாமலை மாவட்ட அணி தேர்வு செய்யப்பட உள்ளது.

இந்த போட்டியில் விளையாட விரும்பும் வீரர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தை இருப்பிடமாக கொண்டவராக இருக்க வேண்டும்.

மேலும் 1.9.1993-ம் ஆண்டுக்கு பிறகும் 31.8.2010-ம் ஆண்டுக்குள் பிறந்தவராக அதாவது 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இதில் கலந்து கொள்ள வரும் வீரர்கள் ஆதார் கார்டு அசல் மற்றும் நகல், 2 பாஸ் போர்ட் அளவு புகைப்படம் மற்றும் பிறப்பு சான்றிதழ் எடுத்து வர வேண்டும்.

கிரிக்கெட் வீரர் தேர்வு வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணியளவில் அருணை என்ஜினீயரிங் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த தகவலை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சிவக்குமார், இணை செயலாளர் ஸ்ரீஹன்ஸ்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News