உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை அம்மணி அம்மன் கோபுரத்தில் உள்ள சிலை உடைந்து விழுந்தது

Published On 2023-09-27 12:08 IST   |   Update On 2023-09-27 12:08:00 IST
  • பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்
  • இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தகவல்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் 24 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 6 பிரகாரங்கள் மற்றும் 9 பெரிய கோபுரங்கள் உள்ளன.

இக்கோவில் பல்லவர்கள் சோழர்கள், விஜயநகர மன்னர்கள் மற்றும் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அம்மணி அம்மன் கோபுரத்தில் இருந்த சதாசிவர் சிலையின் ஒரு பகுதி நேற்று காலை உடைந்து கீழே விழுந்துள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கோபுரத்தில் இருந்து உடைந்து விழுந்த சிலை அறநிலையத்துறை பொறியாளர்களை கொண்டு ஆய்வு செய்யப்பட்டு விரைவில் சீரமைக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News