உள்ளூர் செய்திகள்
படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
- ரூ.2.17 லட்சம் வசூல்
- 217 கிராம் தங்கம், வெள்ளி 317 கிராமும் செலுத்தியிருந்தனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்ஷன் உத்தரவின் பேரில், துணை ஆணையர் சிவலிங்கம், கண்காணிப்பாளர் ஆறுமுகம், செயல் அலுவலர் சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
இதில் கோயில் மேலாளர் மகாதேவன், எழுத்தர் சீனிவாசன், படவேடு இந்தியன் வங்கி உதவி மேலாளர் ராஜா, உள்பட 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு உண்டியல் எண்ணும் பணியை செய்தனர்.
இதில் உண்டியல் காணிக்கையாக ரூ.2,17,604-ம், 217கிராம் தங்கம், வெள்ளி 317 கிராமும் செலுத்தியிருந்தனர்.