- கோவில் உண்டியல் உடைத்து துணிகரம்
- போலீசார் விசாரணை
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை- வேலூர் சாலையில் தீபம் நகரில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக் கோவில் காலையில் நடை திறப்பதும், மாலையில் நடை சாத்துவதும் வழக்கம். கோவிலில் உண்டியல் வைக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கை செலுத்தி வந்தனர்.
நேற்று இரவு கோவிலை பூட்டி விட்டு சென்றனர். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் கோவில் கேட்டின் மேலே ஏறி கோவிலுக்குள் குதித்தனர். மேலும் பக்தர்கள் செலுத்திய காணிக்கை உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடி சென்றனர்.
இந்த நிலையில் காலையில் அந்த வழியாக சென்றவர்கள் கோவில் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் கோவில் நிர்வாகி தேவராஜிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி னார். மேலும் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.