உள்ளூர் செய்திகள்
வேளாண் சந்தை, பண்ணை வர்த்தகம் குறித்து பயிற்சி கூட்டம்
- திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அலுவலகத்தில் வேளாண் களப்பணியாளர்களுக்கு மின்னணு வேளாண் சந்தை மற்றும் பண்ணை வர்த்தகம் குறித்த பயிற்சி கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 தாலுகாகளை சேர்ந்த வேளாண், தோட்டக்கலை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்ந்த உதவி இயக்குநர்கள், வேளாண், தோட்டக்கலை அலுவலர்கள் உள்ளிட்ட வேளாண் அலுவலர்களுக்கு மின்னணு தேசிய வேளாண் சந்தை மற்றும் பண்ணை அளவிலான வர்த்தகம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் வேளாண் இணை இயக்குநர் அரக்குமார், துணை இயக்குநர்கள் அசோக், ஏழுமலை, ராமநாதன், சிவக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் உமாபதி, விற்பனை குழு செயலாளர் சந்திரசேகர், மேலாளர் லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.