உள்ளூர் செய்திகள்

செய்யாறு சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுகிறோம்

Published On 2023-11-23 13:04 IST   |   Update On 2023-11-23 13:04:00 IST
  • கல்குவாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
  • விலக்கு கேட்டு கோரிக்கை மனு

செய்யாறு:

செய்யாறு தாலுகா கிரஷர்-குவாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு நிலம் தர சம்மதம் தெரிவித்து அறிக்கை அளித்துள்ளனர்.

அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

செய்யாறு சிப்காட் பகுதி 3-க்கு நிலம் எடுப்பு பணி நடைபெற்று கொண்டிருக்கும் இந்த தருவாயில் எங்கள் சங்க உறுப்பினர்கள் சில பட்டா நிலங்களை கிரையம் பெற்று அரசு விதிகளுக்கு உட்பட்டு அரசு அனுமதியுடன் தொழில் செய்து வருகின்றனர்.

குறிப்பாக அத்தி மற்றும் வடஆளபிறந்தான் கிராமங்களில் உள்ள அரசுக்கு சொந்தமான மலையில் குவாரி குத்தகை விடப்பட்டு தொழில் நடைபெற்று வருகிறது.

அதன் அருகாமையில் சில பட்டா நிலங்களை கிரையம் பெற்று குவாரி குத்தகை பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளோம். மேலும் அந்த இடம் சிப்காட் பகுதி என அறிவிப்பு வந்தபடியால் அந்த பணி நிலுவையில் உள்ளது. நாங்களும் விலக்கு கேட்டு கோரிக்கை மனு அளித்துள்ளோம்.

அரசு விதிகளுக்கு உட்பட்டு விலக்கு அளிக்கும் பட்சத்தில் நாங்கள் அதை முழுமையாக வரவேற்கின்றோம். அல்லது அரசு எடுக்கும் சட்ட திட்டங்களுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் கடந்த சில மாதங்களாக நடந்து கொண்டிருக்கும் சிப்காட் நில எடுப்பு போரட்டத்தில் அந்த பகுதியை சேர்ந்த எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News