உள்ளூர் செய்திகள்
- வேகத்தடையில் பைக் ஏறி இறங்கியது
- போலீசார் உடலை மீட்டு விசாரணை
ஆரணி:
ஆரணி அடுத்த கீழ் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் பரசுராமன் (வயது 23). இவர் களம்பூரில் உள்ள ரைஸ் மில்லில் வேலை செய்து வந்தார்.
இவரது நண்பரான சதீஷ்குமார் என்பவருடன் நேற்று பைக்கில் ஆரணி நோக்கி சென்று கொண்டிருந்தார். பாபா நகர் அருகே வரும்போது வேகத்தடையில் பைக் ஏறி இறங்கியது. இதில் நிலை தடுமாறி பைக்கில் இருந்து பரசுராமன் தவறி கீழே விழுந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த பரசுராமனை மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்.
ஆனால் வரும் வழியிலேயே பரசுராமன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து பரசுராமன் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.