உள்ளூர் செய்திகள்

சாராயம் விற்ற 2 பெண்கள் கைது

Published On 2023-04-18 14:54 IST   |   Update On 2023-04-18 14:54:00 IST
  • மனு கொடுத்த சில மணி நேரங்களில் நடவடிக்கை
  • கலெக்டருக்கு பாராட்டு

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பாச்சல் பகுதியில் சாராயம், மது அதிகளவில் அதே பகுதியை சேர்ந்தவர்கள் கள்ளதனமாக விற்பனை செய்து வருகின்றனர்.

எனவே ஊர் பொதுமக்கள் சார்பில் பலமுறை எச்சரித்தும் சாராயம் விற்பனை நிறுத்தாததால் நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

இந்நிலையில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் இது குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக பாச்சல் பகுதிக்கு சென்று சாராயம் விற்பனை செய்து கொண்டு இருந்த பாச்சல் லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த ஜெகஸ்வரி (வயது 55) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராசாத்தி (வயது 34) ஆகிய இருவரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

மேலும் இவர்களிடமிருந்து 15 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கலெக்டரிடம் மனு அளித்த சில மணி நேரங்களிலேயே நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் போலீசார் மற்றும் கலெக்டரை பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News