உள்ளூர் செய்திகள்

மாடு விடும் விழாவில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள்.

காளைகள் முட்டி 30 பேர் காயம்

Published On 2023-01-30 15:13 IST   |   Update On 2023-01-30 15:13:00 IST
  • மாடு விடும் விழாவில் விபரீதம்
  • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூர் கிராமத்தில் மயிலார் பண்டிகையை ஒட்டி எருது விடும் விழா நடைபெறுவது வழக்கம் மாவட்ட நிர்வாகம் உரிய பாதுகாப்பு இல்லை என 3 முறை தள்ளி வைத்தனர்.

இதனை கண்டித்து 100-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து காவல்துறை மற்றும் வருவாய் துறை பேச்சுவார்த்தைக்குப் பின்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் நேற்று எருது விடும் விழா நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் வேலூர், கிருஷ்ண கிரி, ராணிப்பேட்டை, தர்மபுரி, மாவட்டங்களில் இருந்தும் மற்றும் ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் 305 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றனர்.

நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் தலைமை யில் வருவாய் அலுவலர்கள் முன்னிலையில் விழா குழுவினர் உறுதி மொழி ஏற்றனர்.

கால் நடை மருத்துவர்கள் மாடுகளை பரிசோதனை செய்த பின்னர் வாடிவாசல் வழியாக காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது. இதில் காளைகள் முட்டி 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

மாடு விடும் திருவிழாவில் விதிமுறைகளை பின்பற்றி விழா நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாணியம்பாடி டி.எஸ்.பி. சுரேஷ் பாண்டியன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Tags:    

Similar News