- பொதுமக்கள் பீதி
- மேலும் 3 ஆடுகள் படுகாயம்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் சென்ன கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் சாமிக்கண்ணு இவரது மனைவி ஈஸ்வரி (வயது 50). இவருக்கு சொந்தமான நிலம் வனத்துறையினருக்கு சொந்தமான இடத்தையொட்டி உள்ளது.
இவருக்கு சொந்தமாக 4 ஆடுகளை வளர்த்து வருகிறார். வழக்கம் போல நேற்று காலை தனது 4 ஆடுகளை மேய்ச்சலுக்கு தன்னுடைய நிலத்தில் கட்டியிருந்தார். அப்போது மதியம் ஈஸ்வரி தங்களது ஆடுகளை பார்க்க சென்றார்.
இதில் 4 ஆடுகள் நிலத்தில் மயங்கி விழுந்து கிடந்தது. இதனை கண்ட ஈஸ்வரி அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அதனை பார்த்த போது மர்ம விலங்கு கடித்ததால் ஒரு ஆடு இறந்தது தெரியவந்தது. மேலும் 3 ஆடுகள் படுகாயம் அடைந்திருந்தது.
இதுகுறித்து ஈஸ்வரி உடனடியாக நாட்டறம்பள்ளி கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தார். இதனால் 3 ஆடுகள் சிகிச்சை பெற்று வருகின்றது.
மேலும் அப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறுகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறுத்தை போன்ற விலங்கு கடித்தா என அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதனால் அப்பகுதியில் வனத்துறையினர் மர்ம விலங்கு விரைவில் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.