அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா - அண்ணாமலை பங்கேற்பு
- ஆசிரியர் பண்புப் பயிற்சி முகாமின் நிறைவு விழா நடைபெற்றது.
- சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
திருப்பூர் :
திருப்பூர் கே. செட்டிப்பாளையம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் 10-ம்வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழாவும், ஆசிரியர் பண்புப் பயிற்சி முகாமின் நிறைவு விழாவும் நடைபெற்றது. இவ்விழாவில் விவேகானந்தா சேவா அறக்கட்டளையின் செயலாளர் எக்ஸ்லான். கே. ராமசாமி வரவேற்புரை ஆற்றினார். மணிப்பூர், மேகலாயா மாநிலங்களின் முன்னாள் ஆளுநர் சண்முகநாதன் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும் அவர் 10 ம்வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் மூன்றாமிடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பெற்ற மாணவி காவ்யா மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் மூன்றாமிடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பெற்ற மாணவி பிரதிக்ஷாவிற்கும் சிறப்பிடம் பெற்ற பிற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
இவ்விழாவில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பெற்றோர், ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் விவேகானந்தா சேவா அறக்கட்டளையின் தலைவர் வீனஸ். குமாரசாமி நன்றி கூறினார்.