உள்ளூர் செய்திகள்

102 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள்

Published On 2022-12-20 09:57 IST   |   Update On 2022-12-20 09:57:00 IST
  • சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் சிறுபான்மையினா் உரிமைகள் தின விழா நடைபெற்றது.
  • மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் தலைமை வகித்தாா்.

திருப்பூர் : 

திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் சிறுபான்மையினா் உரிமைகள் தின விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் தலைமை வகித்தாா்.

இதில், மாவட்ட முஸ்லிம் மகளிா் உதவும் சங்கத்தின் மூலம் 99 சிறுதொழில் முனைவோருக்கு ரூ.4.95 லட்சம் மதிப்பீட்டில் உதவித் தொகை, 21 ஆதரவற்ற ஏழை முஸ்லிம் பெண்களுக்கு ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் உதவித் தொகை, 26 ஆதரவற்ற விதவைகளுக்கு ரூ. 1.30 லட்சம் மதிப்பிட்டில் உதவித் தொகை, 27 ஆதரவற்ற முதியோா்களுக்கு ரூ.1.35 லட்சம் மதிப்பீட்டில் உதவித் தொகை உள்பட மொத்தம் 102 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் ரவிசந்திரன், திருப்பூா் மாவட்ட மகளிா் உதவும் சங்க கௌரவ செயலாளா் முகமது ஜெக்ரியா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். 

Tags:    

Similar News