போதைப்பொருட்களை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீசாருக்கு அமைச்சர் அறிவுறுத்தல்
- அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமையில், திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
- போலீசார் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட காவல் துறை அதிகாரிகளுடன் பணி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம், செய்திதுறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமையில், திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.இதில் மாவட்ட கலெக்டர் வினீத், மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங்சாய், மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக போதை பொருள் ஒழிப்பு, சாலை விதிகளை பின்பற்றாததால் ஏற்படும் விபத்துக்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து போலீசார் செயல்பட வேண்டுமென அமைச்சர் அறிவுறுத்தினர்.திருப்பூர் மாவட்டத்தில் விபத்துகளை குறைப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் . போதை பொருள் இல்லாத மாவட்டமாக திருப்பூர் இருக்க வேண்டும் என்றும் அதற்குரிய நடவடிக்கைகளை போலீசார் உடனடியாக செயல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.