உள்ளூர் செய்திகள்
கோட்டமங்கலம் துணை மின்நிலைய பகுதியில் நாளை மின்தடை ரத்து
- முருங்கப்பட்டி, சுங்காரமுடக்கு மற்றும் குடிமங்கலம் (ஒரு பகுதி) ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டு இருந்தது.
- மேற்கண்ட பகுதியில் வழக்கம் போல் மின்வினியோகம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
உடுமலை:
உடுமலை மின் பகிர்மான வட்டம் கோட்டமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் பொன்னேரி, வெள்ளியம்பாளையம், கோட்டமங்கலம், அய்யம்பாளையம் புதூர், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்காரமுடக்கு மற்றும் குடிமங்கலம் (ஒரு பகுதி) ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் மின் நிலைய பராமரிப்பு பணிகள் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.எனவே மேற்கண்ட பகுதியில் வழக்கம் போல் மின்வினியோகம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.