தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்- தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் வாக்களித்தார்

Published On 2025-02-05 08:08 IST   |   Update On 2025-02-05 08:08:00 IST
  • ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.
  • ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் அனைவரும் வாக்குகளை தவறாமல் செலுத்தி ஜனநாயக கடமையாற்ற வேண்டும்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை தொடங்கியது. தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 46 பேர் களத்தில் உள்ளனர்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மாவட்ட ஆட்சியர் வாக்கு செலுத்தினார். ஆட்சியர் ராஜகோபால் மக்களோடு மக்களாக நின்று ஜனநாயக கடமையாற்றினார்.

இவரைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார். சூரம்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்தினருடன் சென்று சந்திரகுமார் ஜனநாயக கடமை ஆற்றினார்.

இதையடுத்து தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அனைவரும் வணக்கம்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வின் வேட்பாளராக, உதய சூரியன் சின்னத்தின் வேட்பாளராக, தமிழக முதலமைச்சர், கழக தலைவரின் ஆசியோடும், துணை முதலமைச்சர் கழகத்தின் இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நல்வாழ்த்துகளோடு, ஈரோடு மாவட்டத்தின் அமைச்சர் முத்துசாமியின் வழிகாட்டுதலோடு இந்த இடைத்தேர்தலை சந்தித்து உள்ளேன்.

இந்த இடைத்தேர்தலை பொறுத்தவரையிலும் தி.மு.க.வின் உதய சூரியன் சின்னம் மிகப்பெரிய வெற்றியை பெறும். இந்த வெற்றிக்கு காரணமாக இருக்கப்போவது கடந்த 4 ஆண்டு திராவிட மாடல் அரசின் மக்களின் நல திட்டங்களே.

தற்போது வாக்குப்பதிவு தொடங்கி நடந்துகொண்டிருக்கும் நிலையில் நான் எனது வாக்குச்சாவடியில் வாக்கை பதிவு செய்துள்ளேன்.

இந்த தேர்தலில் கிழக்கு தொகுதி மக்கள் அனைவரும் வாக்குகளை தவறாமல் செலுத்தி ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.

Tags:    

Similar News