தமிழ்நாடு

பெண்களுக்கு தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலமாக எத்தனை சகோதரிகள் பாதிக்கப்பட வேண்டும்? அண்ணாமலை

Published On 2025-02-05 10:22 IST   |   Update On 2025-02-05 10:26:00 IST
  • தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் மிக சாதாரணமாகிவிட்டன.
  • போதைப்பொருள் எளிதில் கிடைக்கக்கூடிய பொருளாக மாறிவிட்டது.

சென்னை:

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

சென்னை கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திற்கு வெளியே ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் 18 வயது இளம்பெண் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாள். உதவிக்கான சிறுமியின் கூக்குரலைக் கேட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த மனிதநேயமிக்க ஒருவரின் தலையீட்டால் கடத்தப்பட்ட பெண்ணை போலீசார் மீட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் மிக சாதாரணமாகிவிட்டன. போதைப்பொருள் எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளில், 2022 மற்றும் 2024 க்கு இடையில், தமிழ்நாட்டில் NDPS (போதை பொருள் சார்ந்த) வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1122 மட்டுமே. 2021 ஆம் ஆண்டில் (ஒரு வருடத்தில்), NDPS வழக்குகளில் மொத்த கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9632 ஆகும். தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் மெத்தம்பேட்டமைன் விற்பனை அதிகரித்து வருகிறது. ஆனால் கைது செய்யப்படுவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகின்றன. எப்படி?

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு சுதந்திரமாக செயல்படுவதற்கு தமிழக அரசு வேண்டுமென்றே மெத்தனமாக இயங்கி வருகிறதா?

தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பானதாக மாற மேலும் எத்தனை சகோதரிகள் பாதிக்கப்பட வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 



Tags:    

Similar News