தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 10.95% வாக்குகள் பதிவு

Published On 2025-02-05 10:03 IST   |   Update On 2025-02-05 10:04:00 IST
  • காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
  • இன்று பதிவாகும் வாக்குகள் வருகிற 8-ந்தேதி எண்ணப்படுகிறது.

ஈரோடு:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி அளவில் தொடங்கியது. இத்தேர்தலில் தி.மு.க.வின் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி உட்பட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவுக்காக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

வாக்குப்பதிவு தொடங்கியதும் மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜ கோபால் சுன்கரா தனது வாக்கினை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் ஜனநாயக கடமையாற்றினார்.

இதனிடையே, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.85சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இன்று பதிவாகும் வாக்குகள் வருகிற 8-ந்தேதி எண்ணப்படுகிறது.

Tags:    

Similar News