தமிழ்நாடு

நீலகிரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Published On 2025-02-05 00:41 IST   |   Update On 2025-02-05 00:41:00 IST
  • பேருந்தையே பறிமுதல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பேருந்தின் உரிமத்தை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும்.

சென்னை:

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும், இன்னும் அதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டு வருகின்றனர்.

அதிலும், ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களில் வனவிலங்குகளின் நலன்கருதி முற்றிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. அப்படி மீறுவோருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.


இந்நிலையில் இன்று சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவில், நீலகிரி வரும் பேருந்துகளில் பயணிப்பவர்களிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் அந்த பேருந்தையே பறிமுதல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பேருந்தின் உரிமத்தை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும் என்றும் இப்படி கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நீலகிரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியும் என்றும் சென்னை ஐகோர்ட்டு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News