தமிழ்நாடு
தமிழ்நாட்டில் ஒரு லட்சம் மக்களுக்கு 159.54 போலீசார் உள்ளதாக மத்திய அரசு தகவல்
- அதிகபட்சமாக நாகலாந்தில் ஒரு லட்சம் மக்களுக்கு 1135.94 போலீசார் உள்ளனர்.
- குறைந்தபட்சமாக பீகாரில் ஒரு லட்சம் மக்களுக்கு 81.49 போலீசார் உள்ளனர்.
அனைத்து மாநிலங்களிலும் காவல்துறை - பொதுமக்கள் விகிதாச்சாரம் குறித்து மத்திய அரசு மக்களவையில் தரவுகளை அளித்துள்ளது.
இதில், ஒரு லட்சம் மக்களுக்கு, தமிழ்நாட்டில் 159.54 என்ற விகிதத்தில் போலீசார் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக நாகலாந்தில் இவ்விகிதம் 1135.94 ஆகவும் குறைந்தபட்சமாக பீகாரில் இவ்விகிதம் 81.49 ஆக உள்ளது.