உடுமலையில் மண்வளம் காப்போம் பேரணி- கருத்தரங்கம்
- திருமண மண்டபத்தின் முன்பு இருந்து ஊர்வலமாக வந்து விழாவில் கலந்து கொண்டனர்.
- மண்வளம் காப்போம் பற்றி உறுதிமொழி ஏற்றுகொண்டனர்.
உடுமலை:
ஈஷா யோகா மையத்தின் சார்பில் உடுமலைபேட்டை சுற்றுவட்டாரப்பகுதியான மடத்துக்குளம், ஜல்லிபட்டி, எரிசனம்பட்டி, குமரலிங்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து மண்வளம் காப்போம் பேரணி நடைபெற்றது.
பின்னர் நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மண்வளம் காப்போம் பற்றி உறுதிமொழி ஏற்றுகொண்டனர். முன்னதாக வாகன பேரணி செல்ல இருந்த நிலையில் அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் நகராட்சி திருமண மண்டபத்தின் முன்பு இருந்து ஊர்வலமாக வந்து விழாவில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஈஷா யோகா மைய பொறுப்பாளர் கிருஷ்ணகுமார், சிறப்பு விருந்தினர்களான யூ. கே .பி .முத்துக்குமாரசாமி, உடுமலை மக்கள் பேரவை வர்ஷிணி இளங்கோ, லட்சுமி ஜுவல்லரி சிபி சக்கரவர்த்தி யோகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பின்பு நினைவு பரிசு வழங்கப்பட்டது.