ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கம்
- செகந்திராபாத் - கொல்லம் சிறப்பு ெரயில் (எண்: 07119) இயக்கப்படுகிறது.
- தாம்பரம் - மங்களூரு ரெயில் (எண்: 06049) 2-ந் தேதி இயக்கப்படுகிறது.
திருப்பூர்:
வருகிற 29ந் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி செகந்திராபாத் - கொல்லம் சிறப்பு ெரயில் (எண்: 07119) இயக்கப்படுகிறது.
இன்று 27ந்தேதி கொல்லத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் ெரயில் (எண்: 07120) மறுநாள் இரவு 11:50 மணிக்கு செகந்திரபாத் சென்றடையும். திருப்பூருக்கு அதிகாலை 3:15 மணிக்கு வரும்.
தாம்பரம் - மங்களூரு ெரயில் (எண்: 06049) 2-ந் தேதி இயக்கப்படுகிறது. மதியம் 3:30 மணிக்கு புறப்படும் ெரயில் மறுநாள் காலை 9:30 மணிக்கு மங்களூரு சென்று சேரும். திருப்பூரை இரவு 11:28 மணிக்கு கடந்து செல்லும்.மறுமார்க்கமாக மங்களூரு - தாம்பரம் ெரயில் (எண்: 06050) 3-ந் தேதி இயங்கும்.இரவு 11 மணிக்கு புறப்படும் ெரயில் மறுநாள் மதியம் 3:15 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.
திருப்பூரில் இந்த ெரயில் காலை 7:13 மணிக்கு நின்று செல்லும் என அறிவிக்கபட்டுள்ளது.