உள்ளூர் செய்திகள்
செய்யாறு அருகே மயங்கி விழுந்த மூதாட்டி பலி
- வெயில் தாக்கத்தால் பரிதாபம்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
வெம்பாக்கம் தாலுகா செய்யாறு அருகே சிறுவஞ்சிப்பட்டு கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியின் அருகே நேற்று முன்தினம் பிற்பகல் 12 மணியளவில் வெயில் தாக்கத்தால் சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி மயங்கி கிடந்தார். அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ராஜி பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சதாசிவம் வழக்குப்பதிவு செய்து இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகிறார்.