உள்ளூர் செய்திகள்

மாடு விடும் விழாவில் காளை மிதித்து முதியவர் சாவு

Published On 2023-03-04 15:25 IST   |   Update On 2023-03-04 15:25:00 IST
  • சிகிச்சை பலனின்றி பரிதாபம்
  • வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என உறவினர்கள் எழுதி கொடுத்தனர்

ஆரணி:

ஆரணி அடுத்த ராட்டினமங்கலம் கிராமத்தில் கடந்த 1-ந் தேதி கிருத்திகை பெருவிழாவையொட்டி நடைபெற்ற காளை விடும் விழாவில் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

காளைவிடும் விழா நடந்தபோது பார்வையாளர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கட்டை அருகே இருந்த ஆரணி அடுத்த அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சின்னப் பையன் (வயது 65) என்பவரை சீறிப்பாய்ந்த காளை மிதித்து சென்றது. இதில் சின்னப் பையன் படுகாயம் அடைந்தார்.

பின்னர் அங்கிருந்தவர்கள் முதியவரை மீட்டு 108 அவசர ஆம்புலன்சில் உதவியாளர்கள் மருத்துவ சிகிச்சைகள் வழங்கினர். மேல் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தீவிர சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவம னைக்கு அவரை உறவினர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னப்பையன் பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என போலீஸ் நிலையத்தில் சின்னப்பையனின் உறவினர்கள் எழுதி கொடுத்துவிட்டு உடலை சொந்த கிராமத்திற்கு எடுத்துச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News