படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் தொடர் அன்னதானம்
- வள்ளலார் 200-வது விழா முன்னிட்டு நடந்தது
- கலெக்டர் தொடங்கி வைத்தார்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சட்டமன்ற மான்யக் கோரிக்கையில் அறிவித்த வள்ளலாரின் தொடர் அன்னதான திட்டத்தை நேற்று 14-ம்தேதி திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் கொண்டு தொடங்கி வைத்தார்.திருவண்ணாமலை மண்டல இணை ஆணையர் க.பெ.அசோக்குமார் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் உதவி கலக்டர் பிரசாத்சிங், பயிற்சி கலக்டர் ரிஷப்ராணி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் வெங்கடேசன், படவேடு ரேணுகாம்பாள் கோவில் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ஆர்.வி.சேகர், ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், துணை தலைவர் தாமரைச்செல்வி ஆனந்தன், போளூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், போளூர் வட்டாட்சியர் சண்முகம், ஒன்றிய கவுன்சிலர் தஞ்சிம்மாள்லோ கநாதன், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வள்ளலாரின் திருஅருட்பா பக்தி பாடல்களை பாடினர்.
தொடர்ந்து கலெக்டர் முருகேஷ் படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தார். கோவில் சார்பில் தர்மேஸ்வர சிவாச்சாரியார் பிரசாதங்கள் வழங்கினர்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் மு ஜோதிலட்சுமி, செயல் அலுவலர் சிவஞானம், மேலாளர் மகாதேவன் கணக்காளர் சீனிவாசன் உள்பட கோவில் அலுவலர்கள் செய்து இருந்தனர்.