நீர்வீழ்ச்சியை காண குவியும் சுற்றுலா பயணிகள்
- விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
- சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்கின்றனர்.
அரவேனு,
கோத்தகிரியில் இருந்து மசக்கல் செல்லும் வழியில் உயிலட்டி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக நீர்வீழ்ச்சியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
நீர்வீழ்ச்சி சுற்றிலும் அதிகப்படியான விவசாய பூமிகள் இருந்து வருகிறது. மேலும் இந்த நீர் வீழ்ச்சியில் இருந்து வரும் நீரின் மூலம் மசக்கல் கூக்கலதெறை பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, சைனீஸ் காய்கறிகள் எனப் பலதரப்பட்ட காய்கறிகளை விளைவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விடுமுறை நாட்கள் என்பதாலும், அனைத்து சுற்றுலா மையங்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்வதாலும் இந்த நீர்வீழ்ச்சிக்கு அதிகமானோர் வந்து செல்கின்றனர்.
நீலகிரிக்கு வரும் வழியில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்கின்றனர்.