உள்ளூர் செய்திகள்

மாநகராட்சி அதிகாரிகள் உடன் வியாபாரிகள் வாக்குவாதம்- பரபரப்பு

Published On 2023-12-03 15:47 IST   |   Update On 2023-12-03 15:47:00 IST
  • ஓசூர் மாநகராட்சி அதிகாரிகள் உடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
  • 3 பேர் மீது புகார்

ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா உத்தரவின் பேரில், மாநகர நல அலுவலர் பிரபாகரன் தலைமையில் துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள், பணியாளர்கள் கொண்ட குழு நேற்று உழவர் சந்தை, ராயக்கோட்டை ரோடு, காமராஜர் காலனி, பஸ் நிலையம், பூ மார்க்கெட் ஆகிய பகுதிகளில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பரிசோதனை மேற்கொண்டனர்.

அப்போது, உழவர் சந்தை பகுதியில் 8.7 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.8,700 அபராதமும், ராயக்கோட்டை ரோடு பகுதியில் சுற்றித்திரிந்த 4 மாடுகளுக்கு தலா ரூ. 1,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பூ மார்க்கெட் பகுதியில் சுமார் 13 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது, பூ மார்க்கெட்டில் உள்ள கடைக்காரர்கள் மாநகராட்சி அலுவலர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதன்பேரில் ஓசூர் ராம் நகரை சேர்ந்த வினோத்குமார் (23), சிவசக்தி நகரை சேர்ந்த ககன் (22) மற்றும் பாகலூர் தேர்பேட்டை பகுதியை சேர்ந்த முரளி (25) ஆகிய 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News