உள்ளூர் செய்திகள்

போரில் பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இஸ்ரேல் போரில் பலியானவர்களுக்கு அஞ்சலி

Published On 2023-10-21 09:15 GMT   |   Update On 2023-10-21 09:15 GMT
  • காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
  • ஆன்மா சாந்தியடைய மெழுகுவர்த்தி ஏந்தி ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

தஞ்சாவூர்:

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.

இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களால் காஸா நகரம் உருக்குலைந்துள்ளது

இந்த தாக்குதல்களால் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களும் , குழந்தைகளும் உயிரிழந்து வருகின்றனர்.

சமீபத்தில் காஸாவில் உள்ள மருத்துவம னையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 500க்கும் மேற்பட்டவர்கள் பலியானது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இதனைத் தொடர்ந்து உலகெங்கிலும் போருக்கு எதிரான குரல்கள் ஒலித்து வருகின்றன.

பிரதமர் மோடி , தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரும் இந்த தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே அமைதி திரும்பவும் போரில் உயிர்நீத்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும் காயம டைந்தவர்கள் விரைவில் நலம் பெறவும் உலகெங்கும் மனிதம் தழைக்கவும் தஞ்சை நகர பொதுமக்கள் அமைதி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர் .

தஞ்சை ரெயிலடி பகுதியில் ஜோதி அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் தஞ்சாவூர் நகர பொதுமக்கள் சார்பில் 50 பெண்கள் இந்த கூட்டு பிரார்த்தனை நிகழ்வில் ஈடுபட்டனர்.

போரில் இறந்தவர்களின் புகைப்படத்துக்கு மலர் தூவி அவர்களின் ஆன்மா சாந்தியடைய மெழுகுவர்த்தி ஏந்தி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

மேலும் இந்த போரினால் காயமடைந்தவர்கள், உடமைகளை இழந்தவர்கள் விரைவில் மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பவும் போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதி திரும்பவும் கூட்டு அமைதி பிரார்த்தனை செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் தலைமையில் மேலாளர் ஞானசுந்தரி, மேற்பார்வையாளர் கல்யா ணசுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News