உள்ளூர் செய்திகள்
- பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது
- எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் வழங்கப்பட்டது
திருச்சி:
மழைக்காலத்தை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு நடந்தது. கிளை ஒருங்கிணைப்பாளர் பக்ருதீன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஊடக அணி மாவட்ட செயலாளர் உபைதுர் ரஹ்மான்,தொண்டரணி மாவட்ட செயலாளர் முகமது ஆரிப்,மேற்கு தொகுதி செயற்குழு உறுப்பினர் அப்துல் ரகுமான், செயற்குழு உறுப்பினர் ஆட்டோ சையது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.