உள்ளூர் செய்திகள்

மாநில போட்டியில் பங்கேற்க திருச்சி வீரர்களுக்கு வாய்ப்பு

Published On 2022-08-11 15:44 IST   |   Update On 2022-08-11 15:44:00 IST
  • தமிழ்நாடு மாநில தடகள சங்கம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தடகள சங்கம் மூலமாக வரும் 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான தடகள போட்டிகள் நடை பெறவுள்ளது.
  • பங்கு பெற விருப்பம் உள்ள வீரர், வீரங்கனை கள் டிஎன்அத்லெட்டிக் அசோசியேஷன்.காம் என்ற இணையவழி மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்

திருச்சி: தமிழ்நாடு மாநில தடகள சங்கம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தடகள சங்கம் மூலமாக வரும் 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான தடகள போட்டிகள் நடை பெறவுள்ளது.

இந்த போட்டி 14, 16, 18, 20 என 4 வயது பிரிவுகளில் நடைபெறுகிறது. இதில் பங்கு பெற விருப்பம் உள்ள வீரர், வீரங்கனை கள் டிஎன்அத்லெட்டிக் அசோசியேஷன்.காம் என்ற இணையவழி மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், இந்த போட்டியில் வெற்றி பெறும் வீரர், வீரங்கனைகள் அடுத்த மாதம் ஆந்திரா மாநிலம் குண்டூரில் நடைபெறும் 33வது தென் மண்டல ஜூனியர் தடகள போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News