கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல்
- கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்
- மத்திய, மாநில அரசை கண்டித்து நடந்தது
திருச்சி:
அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யவும், விண்ணை முட்டும் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும், மின்சார திருத்த சட்ட மசோதாவை ரத்து செய்ய வேண்டும் மற்றும் தமிழகத்தில் சொத்து வரி, மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற்றிட வலியுறுத்தியும், அதேபோன்று ஏழை மற்றும் அடித்தட்டு மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் தழுவிய அளவில் இன்றைய தினம் சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது
அதன்படி திருச்சி மாநகர் தெப்பக்குளம் பகுதியில் உள்ள தபால் நிலையம் முன்பு 120க்கும் மேற்பட்டோர் சிங்கார தோப்பு பகுதியில் இருந்து கண்டன கோஷங்களை எழுப்பிய படி செஞ்சட்டை அணிந்தபடி பேரணியாக வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசாரால் கைது செய்தனர்.