உள்ளூர் செய்திகள்

பகுதிநேர ரேஷன் கடை

Published On 2023-10-04 06:49 GMT   |   Update On 2023-10-04 06:49 GMT
  • துறையூர் தொகுதியில்பகுதிநேர ரேஷன் கடை
  • சேனப்பநல்லூர் புதூர் கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

துறையூர் 

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சேனப்பநல்லூர் புதூர் கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி பொதுமக்கள் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சேனப்பநல்லூர் கிராமத்திற்கு சென்று அங்குள்ள ரேஷன் கடையில் பொருட்களை பெற்று வந்தனர்.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் தங்களது பகுதியிலேயே, பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தருமாறு துறையூர் தொகுதி எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமாரிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்ற ஸ்டாலின் குமார் எம்.எல்.ஏ. பகுதி நேர ரேஷன் கடையை தலைமை தாங்கி திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராமதாஸ், காவிரி கணேசன், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, வீரபத்திரன், ஆதிதிராவிடர் நலக்குழு கஸ்டம்ஸ் மகாலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் சரண்யா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ,அரசு அலுவலர்கள், மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News